"சென்னைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்"- வானிலை மையம்
Dec 2, 2025, 15:28 IST1764669495730
சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டு, மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சென்னைக்கு 40 கி.மீ. நெருக்கத்தில் இருந்த நிலையில், தற்போது 60 கி.மீ. தொலைவுக்கு சென்றது.
தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று மாலை வரை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும். கடற்கரையை நெருங்கும் போது, வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் மணிக்கு 3 கி.மீ இருந்து 8 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.


