24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!
Updated: Nov 13, 2023, 10:23 IST1699851235968
24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.