#BREAKING காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது! தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை- வானிலை ஆய்வு மையம்

 
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..

தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த அதிகனமழை, 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.34 செ.மீ  பெய்திருக்கிறது. கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ, சென்னை சென்ட்ரலில் 27.45 செ.மீ,  திருவொற்றியூரில் 22.41 செ.மீ,  எண்ணூரில் 21.58 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  சென்னையின் பல இடங்களில் மேக வெடிப்புக்கு இணையான அளவில் மழை பெய்திருக்கிறது. சென்னையில் அதிக அளவில் மழை பெய்தது ஒரு புறமிருக்க, கத்திவாக்கத்தில்  ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ அளவுக்கும்,  மீனம்பாக்கம்ம், சாத்தங்காடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் கூடுதலாகவும், பாரிமுனை, திருவொற்றியூர்,  எண்ணூர், கார்கில் நகர் ஆகிய இடங்களில் 10 செ.மீக்கு சற்று குறைவான அளவிலும் மழை பெய்திருக்கிறது. 

தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய மேல் காற்று சூறாவளி சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இதன் காரணமாக சென்னைக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் கூறியுள்ளது.