முகக்கவசம் அணிய சொன்ன போலீசாரை ஓங்கி அறைந்த இளைஞர்

 
attack

சென்னையில் முகக்கவசம் அணியாததால் அபராதம் கேட்ட காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

attack

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் உத்திரகுமார் (31). இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை ஒரு மணி அளவில் கொடுங்கையூர் உதவி ஆய்வாளர் பழனி, முதல் நிலை காவலர் உத்தர குமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த இளைஞர் முக கவசம் அணியாமல் இருந்தார். முக கவசத்தை போடும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதற்கு அந்த நபர் இந்த ஊரில் எவ்வளவோ சமூக விரோத செயல்கள் நடக்கிறது, அதை எல்லாம் கேட்க உங்களால் முடியாத.  என்னை மட்டும் முகக் கவசம் போட சொல்கிறீர்களே என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,

அதற்கு முதல் நிலை காவலர் உத்திர குமார் நீங்கள் பேசுவது தவறு என்று கூறி  முக கவசம் அணியாமல் இருந்ததற்கு வழக்குப்பதிவு செய்யப்படும் அபராதம் செலுத்துங்கள் என கூறினார், இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்  உதயகுமாரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அந்த இளைஞர் வியாசர்பாடி புது நகர் 8வது தெரு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் 21 என்பதும் இவர் சட்டக்கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்  மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.