அவையில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி: ஈபிஎஸ்

 
tt

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்  தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு.

tt

இந்நிலையில் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , பேரவையில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என செயல்படுகின்றனர். கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார்; எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்; அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது; சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக அரசு பேச வாக்கு அரசியல் தான் காரணம் ; விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.

eps

கள்ளக்குறிச்சி பிரச்னையை விட முக்கியமான பிரச்னை வேறு என்ன இருக்கிறது?; சட்டப்பேரவையில் ஒரே நாளில் 5 மானியக் கோரிக்கை மீது எப்படி விவாதம் நடத்த முடியும் ? சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும் என்றார்.