சிசிடிவி காட்சியில் அம்பலமான கொடூரம்! நைலான் கயிற்றால் கட்டப்பட்ட 3 வயது சிறுவன்!

 
1

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 3 வயது சிறுவனின் கைகளைக் கட்டிப்போட்டு ஆசிரியை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியை உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுவனின் கைகளைக் கட்டிப்போட்டு ஆசிரியை தாக்கியதாகக் குழந்தையின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிரியை மற்றும் உதவியாளர் மீது புகார் எழுந்த நிலையில், தனியார் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியையைப் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

 சிறுவன் காயத்துடன் வீடு திரும்பியதைத் தொடர்ந்து, வகுப்பறை சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பெற்றோர் ஆய்வு செய்தபோது, குழந்தையின் கைகளை நைலான் கயிறால் கட்டி வைத்திருந்த கொடூரக் காட்சிகள் அம்பலமாகின.