டாக்டர் மகனுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றி! நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம்..!

 
1

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு மறுத் தேர்வின் முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று நள்ளிரவு வெளியிட்டது. இத்தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-வது இடமும் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

விழுப்பரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகனான வெங்கடபதி வேலாயுதம், சென்னை பொன்னேரியில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்றவர். இவர் இத்தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களையும், கட் ஆப் அடிப்படையில் 99.99915 சதவீத மதிப்பெண்களையும் பெற்று, தென்னிந்திய அளவில் அசத்தியுள்ளார்.

தேசிய அளவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பன்சூல் பன்சால் ஆகிய இரு மாணவர்கள் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை வேங்கடாபதி வேலாயுதம் முதலிடம் பிடித்த நிலையில், மாநிலத்தைச் சேர்ந்த இதர மாணவர்களும் தேசிய தரவரிசையில் முத்திரை பதித்துள்ளனர்:

  • சுடர் – 45-வது இடம்
  • சபரி – 59-வது இடம்
  • ஜெய் கிருஷ்ணா – 75-வது இடம்
  • சாம்விதா (மாணவி) – 82-வது இடம்
  • நவீதனா – 88-வது இடம்
  • ஜனனி ஸ்வேதா – 112-வது இடம்
  • ரோகித் மேத்யூ – 115-வது இடம்
  • மற்றொரு ஜெய் கிருஷ்ணா – 134-வது இடம்

வயது மற்றும் முதல் முயற்சி:
17 முதல் 19 வயதுடைய தேர்வர்களே அதிக மதிப்பெண்களைக் குவித்துள்ளனர். முதன்முறையாகத் தேர்வை எழுதியவர்களில் 93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மதிப்பெண் வாரியான விவரங்கள்:

  • 690-க்கும் அதிகமாக: 138 மாணவர்கள்
  • 700-க்கும் அதிகமாக: 19 மாணவர்கள்
  • 650-க்கும் அதிகமாக: 1,492 மாணவர்கள்
  • 600-க்கும் அதிகமாக: 10,160 மாணவர்கள்
  • 500-க்கும் அதிகமாக: 90,780 மாணவர்கள்

சுமார் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் மொத்தம் 11.21 லட்சம் பேர் மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதில், தகுதி பெற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிக அதிகமாக உள்ளது. மொத்தத்தில் 58 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • நாடு முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் மொத்தம் 13 மொழிகளில் 5,440 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
  • மொத்த தேர்வர்கள்: இத்தேர்வெழுத மொத்தம் 24,06,079 பேர் பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 20 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.
  • டாப்பர்களின் எண்ணிக்கை: 720க்கு 715 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணை ஆர்யன் குப்தா (பஞ்சாப்) மற்றும் பன்ஷுல் பன்சால் (ஹரியானா) ஆகியோர் கூட்டாகப் பெற்றனர்.
  • இந்தத் திருத்தப்பட்டஇறுதிமதிப்பீட்டுமுறையினால், 720-க்கு 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது.
  • இந்த 138 பேரும் நாடு முழுவதும் 66 நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 705 மதிப்பெண்களுக்கு மேல் 17 பேர் பெற்றுள்ளனர். இவர்கள், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடுமற்றும்தெலங்கானாமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • 700 மதிப்பெண்களுக்கு மேல் 19 தேர்வர்கள் பெற்றுள்ளனர்.
  • 1,492 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலும்10,160 பேர் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகௌம் பெற்றுள்ளனர்.
  • முதல் முறையாக 93 சதவீத தேர்வர்கள், நீட் தேர்வை எழுதி இருந்தனர். இதில் 99 சதவீத தேர்வர்கள், 17 முதல் 19 வயது வரை இருப்பவர்கள் ஆவர்.
  • மாற்றியமைக்கப்பட்ட கட்-ஆஃப்: திருத்தப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பொதுப்பிரிவு, ஓபிசி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகிய அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குமான தகுதி மதிப்பெண்கள் மற்றும் அகில இந்தியத் தரவரிசைப் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
  • மதிப்பெண் சான்றிதழ்: மாணவர்கள் தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டுப் புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • சந்தேகங்கள், புகார்களுக்கு: neetug2026@nta.ac.in அல்லது 011-40759000