சட்டப்பேரவையில் எ.வ.வேலு - ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்..!
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ வேலு உரையாற்றினார். அவர், “திமுக ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மணி மண்டபங்கள் அமைத்து தந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம்.
பெரியாரை கொள்கை தலைவர் என தவெக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. கோவையில் 3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆதவ் அர்ஜுனா, “பெரியார் பெயரை நாங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதாக எ.வ வேலு கூறுகிறார். அறிவாலயத்தில் இன்னும் பெரியார் சிலை நிறுவப்படவில்லை. ஆனால் எங்களது கட்சி அலுவலகத்தில் பெரியார் சிலையும் அம்பேத்கர் சிலையும் நிறுவப்பட்டு விட்டது” என்று பதிலளித்தார்.
அடுத்த கேள்வியை முன்வைத்த எ.வ வேலு, “காலை உணவு திட்டத்தை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதற்கான அவசியம் என்ன? புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வையுங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். முதலமைச்சர் என்பது பொதுவான சொற்சொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. ஆகையால் ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு பெயர் மாற்றியது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
E. V. Velu-வின் பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா அமைச்சர் அவர்கள் கொடுத்த தரமான பதிலடி 🔥@TVKVIJAYHQ அண்ணா ❤️ pic.twitter.com/YquoN2iuD3
— Vengadesan (@Vengade70732431) August 18, 2026

