தோல்வியான 'வெற்றி பயணம்'- சாலையில் கழன்று ஓடிய பேருந்து சக்கரம்
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரிலிருந்து மதுராந்தகம் சென்ற அரசு பேருந்தில் 2 பின் சக்கரங்களும் திடீரென கழன்றதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பவுஞ்சூரில் இருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்ற தடம் எண் 100C அரசுப் பேருந்தின் பின்புற இரு சக்கரங்கள் கழன்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். நிலைமையை புரிந்துகொண்ட ஓட்டுநர், பேருந்தை சாமர்த்தியமாக சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மகளிருக்கு இலவசப் பயணம் வழங்கிவிட்டு, இப்படிப் பராமரிப்பற்ற பேருந்துகளை இயக்குவதா? இந்தப் பேருந்தில் பயணம் செய்யவே அச்சமாக உள்ளது" எனப் பயணிகள் வேதனை தெரிவித்தனர். பேருந்துப் பராமரிப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அனைத்துப் பேருந்துகளையும் முறையாக ஆய்வு செய்யப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு பேருந்தில் பயணிக்கவே பயமாக இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

