அரசுப் பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

 
Accident

செங்கல்பட்டு அருகே மனாலிநத்தம் பகுதியில் டிப்பர் லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்புதுறை அதிகாரிகள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு  நான்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனயில் அனுப்பி வைத்தனர். 

அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த 30-பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிக்ச்சை பெற்று வருகின்றனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாலவாக்கம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திகேயன் சிகிச்சை பலன் இல்லாமல் மருத்துமனையில் பரிதாமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் நேரில் நலம் விசாரித்தனர். காயமடைந்து சிகிச்சை பெறும் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்து காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றம் செய்த பிறகு தரமான சிகிசிச்சை வழங்ககுமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு பேருந்து விபத்தில்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.