4 இளைஞர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

 
rape

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் 4 இளைஞர்கள் சேர்ந்து வன்கொடுமை செய்ததில் மன உளைச்சலில் தீக்குளித்து  காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தால் அவர் சொந்த கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Hathras rape case: Three of four accused exonerated, none 'found guilty' of  rape

திருவள்ளூர்  மாவட்டம் பூண்டி அடுத்த மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன் காதலனுடன் தனியாக பேசிக் கொண்டிருந்தபோது, கஞ்சா போதையில் அங்கு வந்த நான்கு இளைஞர்கள் காதலனை அடித்து விரட்டிவிட்டு அவரை வன்கொடுமை செய்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தனது வீட்டிற்கு வந்து தலை மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்த சிறுமி பின்னால் தனது வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்த சிறுமி மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்தார்.

Raped, Murdered, Hanged From A Tree: Assam Cops Crack Minors' Death Case

இந்நிலையில் சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்து ஊத்துக்கோட்டை அடுத்த தனது அப்பா வீடான வீட்டுக்கு சென்று ஒரு வாரம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு 11 மணி அளவில் சிறுமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரது உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 

சிறுமியை கூட்டு பாலியல் செய்த அதே கிராமத்தைச்  குரங்கு தண்டலம் பகுதியைச் சேர்ந்த சிறுமியின் காதலன் ஞானமூர்த்தி (20, மோவூர் காலனி பகுதியைச் சேர்ந்த ராசு எ கோகுல் (23), அஜித் குமார் (25), அஜித் (26) ஆகிய நான்கு பேரை பென்னாலூர்பேட்டை போலீசார் கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர். அவர்கள் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துவிட்டனர்.