"குட்டிப் பாப்பா கொடுத்த அன்புப் பரிசு!" - 3 வயது சிறுமி வழங்கிய புத்தகத்தை நெகிழ்ச்சியுடன் பெற்ற முதல்வர்..!

 
1

திருவாரூரில் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பயணித்து திருச்சி வந்தடைந்தார். இன்று (ஏப்ரல் 1) காலை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர் உரையாற்ற உள்ளார்.

திருச்சி ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்குச் செல்லும் வழியில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு நிகழ்வின் போது, 3 வயதுடைய பாத்திமா என்ற சிறுமி, முதலமைச்சருக்குப் புத்தகம் வழங்கிச் சிறப்பான வரவேற்பு அளித்தார். அந்தச் சிறுமியின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போன முதல்வர் ஸ்டாலின், சிரித்த முகத்துடன் அந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு, குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தார். இந்த நெகிழ்ச்சியான காட்சி அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்கள், 2021 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் திருவாரூர் மற்றும் திருச்சியிலிருந்து தொடங்குவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில், இந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் திருச்சியிலிருந்து தனது அடுத்தகட்டப் பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை காலை நடைபெற உள்ள உழவர் சந்தை மைதானப் பொதுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.