சென்னை சில்க்ஸ் கடையின் அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து
Sep 13, 2023, 18:30 IST1694610031544

சென்னை வேளச்சேரி சென்னை சில்க்ஸ் கடையின் அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் அருகே கட்டப்பட்டுவரும் 9 மாடி கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்துக்குள்ளானது. 8 மாடி கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் வேளச்சேரி நெடுஞ்சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.