தவெக கல்வி விருது விழாவில் மாணவர்களுக்கு தடபுடலான விருந்து..!
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இன்று (நவ.4) தவெக சார்பில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தவெக சார்பில் அறுசுவை விருந்து உபசரிக்கப்பட்டது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான மதிய உணவை மாதம்பட்டி பாகசாலா தயாரித்துள்ளது. அதன் உணவுப் பட்டியலில் பாரம்பரிய உணவுகளுடன் சிறப்பு வகைகளும் இடம்பெற்றுள்ளன.
மதிய உணவில் வாணியம்பாடி ஸ்பெஷல் கரிபாலா தம் பிரியாணி, ரைத்தா, ஸ்டீம்ட் முருங்கைக்காய் சாம்பார், சின்ன வெங்காய வெண்டைக்காய் காரக்குழம்பு, மிளகு ரசம், கெட்டித் தயிர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதனுடன் தென்னங்குருத்து பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், எரிசேரி, புடலங்காய் சில்லி, அப்பளம், ஜவ்வரிசி வடை ஆகிய உணவு வகைகளும் பரிமாறப்பட உள்ளன.
இனிப்பு வகைகளில் பனங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா, ஸ்பெஷல் பிரெட் மல்புவா, கருப்புக் கவுனி அரிசி பாயசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், மாங்காய் இஞ்சி ஊறுகாய், உப்பு மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவையும் உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Lunch Menu for CM education award ceremony @CMOTamilnadu https://t.co/67rYzT5LxD
— Nandini Gopalakrishnan (@Nandhini_Twits) November 4, 2026
Lunch Menu for CM education award ceremony @CMOTamilnadu https://t.co/67rYzT5LxD
— Nandini Gopalakrishnan (@Nandhini_Twits) November 4, 2026

