ஓசூர் அருகே அடுத்தடுத்து 4 கார்கள், 2 டாரஸ் லாரிகள் மோதி கோர விபத்து!

 
s s

பெங்களூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 கார்கள், 2 டாரஸ் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் நான்கு கார்கள், இரண்டு லாரிகள் சேதம் அடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பெங்களூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே வாகன நெரிச்சல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓசூர்- கிருஷ்ணகிரி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப் பள்ளி என்ற வனப்பகுதியில் நான்கு கார்கள் மற்றும் இரண்டு லாரிகள் அடுத்தது ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் கார்கள் பலத்தை சேதம் அடைந்துள்ளது. காரில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பின்னர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்ப இடத்திற்கு சென்ற போலீசார் சேதம் அடைந்த வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.