மழையில் மூழ்கிய பயிர்கள்- பூச்சிமருந்து குடித்து நிலத்தில் உயிரைவிட்ட விவசாயி

 
death

மரக்காணம் அருகே  விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide attempt: கந்துவட்டி முறையால் சீரழிகிறதா தமிழகம்; நெல்லை சம்பவம்  தரும் எச்சரிக்கை! - nellai suicide attempt gives warning to take decision |  Samayam Tamil
          
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செந்தில் (வயது 32). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடம் மற்றும் குத்தகை நிலம் உள்பட சுமார் 13 ஏக்கரில் கடந்த ஆண்டு தர்பூசணி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை நடவு செய்துள்ளார். இந்த பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தபோது கொரோனா தொற்றின் காரனமாக விளைந்த தர்பூசணி உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனை செய்யமுடியாமல் நிலத்திலேயே அழுகி நாசமானது. இதனால் இவருக்கு கடந்த ஆண்டு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த ஆண்டும் அவர் வழக்கம்போல் தனது நிலத்தில் மணிலா, தர்பூசணி போன்ற பயிர்களை நடவு செய்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு பெய்த கன மழையால் தற்போதும் இவரது நிலத்தில் இருந்த விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது. இதன்காரணமாக அவர் வாங்கிய கடனை கொடுக்கமுடியாமல் மன உளைச்சலில் இருந்த செந்தில், அவரது நிலத்திலேயே விவசாய பயிர்களுக்கு தெளிக்கும் மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். 

இதனைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை அழைத்துச்சென்று அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதுதொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.