புதுக்கோட்டையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டர்

 
ரவுடி

புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\

Image

புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி  காவல் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை காட்டுப்பகுதியில் போலீசார் சுட்டதில் உயிரிழந்தார்.  ரவுடி துரையை பிடிக்கச் சென்றபோது போலீசாரை தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. தகவலறிந்த உடன் சம்பவ இடத்திற்கு சென்று, டிஐஜி மனோகர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ரவுடி இளவரசனை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு ரவுடி துரை ஆவார்.