நிஷாந்தை நெருங்கிய போலீஸ்! தனிஷ்க் நகைக்கடை வழக்கில் அதிரடி திருப்பம்

 
s

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில், திருடப்பட்ட நகைகளை மறைத்து வைத்ததாக யூடியூபர், இன்ஃப்ளூயன்சர் மீனாட்சி நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளன. தலைமறைவான முக்கிய குற்றவாளி நிஷாந்தை போலீசார் தேடி வருகின்றனர். 

தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் முக்கிய நபரான நிஷாந்தை கைது செய்ய 4வது நாளாக தேடுதல் வேட்டையில் போலீசார் களமிறங்கியுள்ளனர். செல்போன் நெட்வொர்க் மூலம் நிஷாந்தை போலீஸ் நெருங்கிவருவதாக கூறப்படுகிறது. காவல்துறை தேடுவதை அறிந்து நிஷாந்த் இடம் மாறி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேலம், கோவை, ஹைதராபாத், பெங்களூரு, கேரளாவிலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது. 9 தனிப்படைகள் அமைத்து நிஷாந்தை தேடும் பணியில் காவல்துறை தீவிரம் காட்டிவருக்கிறது. நிஷாந்தை காவல்துறையினர் நெருங்கியுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஷாந்தின் தந்தை சுரேஷ், இன்ஸ்டா இன்புளூயன்சர் மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமிருந்து 5 கிலோவுக்கு மேலான தங்க நகைகள் மீட்கப்பட்டன. 

மதுரையில் உள்ள தனிஷ்க் (Tanishq) நகைக்கடையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் 2026 நவம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு (நவம்பர் 12 அதிகாலை) நடைபெற்றுள்ளது. கடை பூட்டப்பட்ட பிறகு, நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்தக் கொள்ளை அரங்கேறியுள்ளது. மறுநாள் (நவம்பர் 12) காலை ஊழியர்கள் கடையைத் திறந்தபோதுதான் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த குற்றத்தை நிஷாந்த்  என்ற குற்றவாளி செய்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மீனாட்சி ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும், டெக் பாஸ் (Tech Boss) என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தவர்.