நவம்பர் 24, 26 இரவு வானில் இரட்டை வானியல் விருந்து: 'பீவர் சூப்பர் மூன்' மற்றும் யுரேனஸ் கோளைக் காணும் வாய்ப்பு

 
Q

பிரம்மாண்டமான 'பீவர் சூப்பர் மூன்' மற்றும் யுரேனஸ் கோளின் எதிர்நிலை நிகழ்வு ஆகியவற்றைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

கார்த்திகை தீப திருநாளான இன்று (நவம்பர் 24) வானில் பிரமாண்ட முழு நிலவு தோன்றும். இந்திய நேரப்படி இன்று இரவு 8.23 மணிக்கு நிலவு முழு பிரகாசத்துடன் காணப்படும்.

 

முழு நிலவு பூமியை மிக நெருக்கமாக அணுகும் போது அது 'சூப்பர் மூன்' என்று அழைக்கப்படுகிறது; நிலவு வழக்கத்தை விட சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும். இது நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி எனத் தொடர்ந்து வரப்போகும் மூன்று பிரமாண்ட முழு நிலவுகளின் தொடக்கமாகும். வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருந்தால் வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம்.

வானியல் ஆர்வலர்கள் கூறியதாவது: வரும் நவம்பர் 26ம் தேதி வியாழக்கிழமை யுரேனஸ் கிரகம் 'எதிரெதிர் நிலையில்' அதாவது சூரியனுக்கும் அந்த கிரகத்திற்கும் இடையில் பூமி வரும் நிலையை அடையும். இந்த ஆண்டில் மிகவும் பிரகாசமாகக் காட்சியளிக்கும். 2.7 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ள இந்தக்கோள், இரவு முழுவதும் வானில் தெரியும். இதைக் காண்பதற்கு பைனாகுலர்கள் அல்லது குறைந்த திறன் கொண்ட தொலை நோக்கியைப் பயன்படுத்துவது சிறந்தது.

யுரேனஸை வெறும் கண்களால் பார்ப்பது என்பது மிகக் கடினமானது. ஒரு ஸ்மார்ட்போன் கேமராவை tripod மீது பொருத்தி, 10 முதல் 30 வினாடிகள் வரை 'எக்ஸ்போஷர்' கொடுத்துப் படம் பிடித்தால், அதைப் படம்பிடிக்க முடியும். தனித்துவமான நீல நிறத்தையும் பார்க்க முடியும் என்கின்றனர் வானியல் ஆர்வலர்கள்.