நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி மீது லாரியில் இருந்து ஜல்லிக்கற்களை கொட்டி அட்டூழியம்

 
ச் ச்

நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி மீது டாரஸ் லாரியில் இருந்து ஜல்லிக்கற்களை கொட்டி அட்டூழியம் செய்த மற்றொரு தரப்பினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள கொண்ட சமூத்திரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பார்த்திபன் தன் வீட்டிற்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு இடத்தை கடந்த 80 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார். இந்த இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், ஜெய்சங்கர் ஆகொயோர் அபரிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று சிலம்பரசன், செய்சங்கர் ஆகியோர் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட முயன்று ஜல்லி கற்களை கொட்டியுள்ளனர் இதனை மாற்றுத்திறனாளியான பார்த்திபன் தரையில் அமர்ந்து ஜல்லி கற்களை கொட்டாமல் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் மீது ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் அவர் சிக்கிக்கொண்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பார்த்திபனை மீட்டு திருவெண்ணைநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்னைநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மாற்றுத்திறனாளி மீது ஜல்லிகற்கள் கொட்டு வீடியோ வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.