திருப்பதியில் ஒன்றரை கிலோ தங்க நகைகளை அணிந்தபடி தரிசனம் செய்த பக்தர்

 
திருப்பதி

நடமாடும் நகை கடை போல்  திருப்பதியில் ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்த ஐதராபாத் பக்தரை அங்கிருந்தவர்கள் வித்தியாசமாக கண்டனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் மதுசூதன். ஐதரபாத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரத்துடன் இரண்டு ஓட்டல்களை நிர்வகித்து வருகிறார்.   திருப்பதி ஏழுமலையானின் தீவிரமான பக்தரான மதுசூதனுக்கு  வருமானத்திற்கு  பஞ்சமே இல்லை.

தங்க ஆபரணங்களை அதிகமாக அணிவதில் ஆர்வம் கொண்டுள்ள  மதுசூதன் தனக்காக 1.5 கிலோ எடையில்  பெரிய அளவிலான பிரேஸ்லெட், மோதிரங்கள், லட்சுமி நரசிம்ம சுவாமியுடன் கூடிய தங்கச் செயின், பெரிய டாலர் ஆகியவை எப்போது அணிந்திருப்பார். இந்நிலையில்  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த மதுசூதன் அணிந்திருந்த நகையை சாமி தரிசனத்தை பார்க்க வந்த சக பக்தர்கள், ஆச்சரியத்துடன் நடமாடும் நகை கடைபோல் இருப்பதை பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.