திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்

 
s s

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடையாக வழங்கிய ஐதராபாத் பக்தரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

திருமலையில் பக்தர்களுக்கு மொட்டை போட சிறப்பு ஏற்பாடு | Special arrangement  for hair donation of devotees at Tirumala

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர்  ஸ்ரீதர் போடுபள்ளி  ரூ.1.20 கோடி மதிப்புள்ள சில்வர் மேக்ஸ் அரை பிளேடுகளை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இந்த பிளைடுகள் வேண்டுதலின்படி ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மொட்டையடிக்க ஒரு வருடத்திற்கு போதுமானதாகும். பிளைடுகளக்  நன்கொடையாளர் திருமலையில் உள்ள அறங்காவலர் குழு தலைவரின் முகாம் அலுவலகத்தில் தலைவர்  பி.ஆர். நாயுடுவிடம்  வழங்கினார். இந்த நிகழ்வில் பேசிய தலைவர் பக்தர்கள் தலைமுடி காணிக்கை பெற மொட்டையடிக்க   பிளேடுகளுக்காக ஆண்டுக்கு ரூ.1.16 கோடி தேவஸ்தானம் செலவிடுகிறது. கல்யாணகட்டாவில் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் அரை பிளேடுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு வருடத்திற்கு போதுமான பிளேடுகளை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்த  நன்கொடையாளரை  வாழ்த்தினார். 

இந்த நிகழ்வில் பேசிய நன்கொடையாளர்  ஸ்ரீதர் போடுபள்ளி, நுகர்வோரின் தேவைகளை மனதில் கொண்டு அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் தங்கள் நிறுவனம் என்று கூறினார். கல்யாணகட்டாவில் பக்தர்களின் தலைமுடி சேகரிக்க மொட்டையடிக்க இந்த அரை  பிளைடுகள் சவர தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார். ஐரோப்பா, அமெரிக்கா உட்பட 52 நாடுகளில் தங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிளைடுகளுக்கு  கடும் தேவை உள்ளது. எங்கள் நிறுவனத்திலேயே  7 ஓ கிளாக் பிளைடு   தயாரிப்பதாக அவர் தெரிவித்தார். இதில் கல்யாணகட்டா  ஏ.இ.ஓ. ராமகாந்த் உடனிருந்தார்.