திருச்செந்தூர் கடலில் மூழ்கி பக்தர் பலி

 
திருச்செந்தூர் கோவிலில் ஒரு கோடிக்கும் மேல் காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வைகாசி விசாகத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர்  கடலில் மூழ்கி  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பக்தர்கள் பலரும் வருகை தந்து  கடலில் புனித நீராடிய பின் முருகனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகப்படியான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வைகாசி விசாகத் திருவிழாவிற்கு  வருகை தந்துள்ளதால்  கடற்கரையில் அமர்ந்தும் ஏராளமானூர் கடலில் புனித நீராடியும் வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

இவ்வாறு கடலில் புனித நீராடிக் கொண்டிருந்த  தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த  பக்தரான இளைஞர் பொல்லா  என்ற செல்வக்கனி என்பவர்  கடல்நீரில் எதிர்பாராத விதமாக மூழ்கினார். இதனைக் கண்ட  கடல் பாதுகாப்பு குழுவினர் அவரை ஆபத்தான நிலையில் இருந்து மீட்டு, திருச்செந்தூர் கோவில் வளாக வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள  தற்காலிக முதலுதவி சிகிச்சை மையத்திற்கு  வேகமாக கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள்  மற்றும் கடல் பாதுகாப்பு குழுவினர்  பலரும் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தனர். முதலுதவிக்கு பின் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு  108 ஆம்புலன்ஸ் மூலம்  கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் வரும் வழியிலேயே செல்வக்கனி உயிரிழந்து விட்டதாக உறுதி செய்தனர்.