BREAKING வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அக். 28ம் தேதி தீவிர புயல்
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றது.
காற்றழத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று அக்.26 ல் புயலாக வலுப்பெறும். அதைத்தொடர்ந்து தீவிரப்புயலாகவும், பின்பு அதி தீவிரப்புயலாகவும் மாறக்கூடும். 26ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் இது புயலாக வலுப்பெற்று, ஆந்திராவில் 28ம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக். 28ம் தேதி ஆந்திராவில் தீவிர புயலாக மணிக்கு 140 கி.மீ வேகத்தில் கரையை கடக்கக்கூடும். பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

