முறுக்கு பாக்கெட்டில் பூரான் - உணவு பாதுகாப்புத்துறைக்கு பறந்த புகார்!!
May 3, 2024, 13:22 IST1714722777144

நெல்லை தனியார் திரையரங்கு அருகில் உள்ள ஸ்வீட் கடையில் வாங்கிய முறுக்கில் பூரான் ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் தனியார் திரையரங்கம் அருகே பிரியம் ஸ்வீட் ஸ்டால் என்ற கடை இயங்கி வருகிறது. இங்கு இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குரு மகாராஜன் என்பவர் பிரியம் ஸ்வீட் ஸ்டால்லின் முறுக்கு பாக்கெட் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.
அதை பிரித்துப் பார்த்தபோது அதில் பூரான் ஒன்று இறந்து கிடந்துள்ளது . இதனால் அதிர்ச்சியடைந்த அவர் , இது தொடர்பாக குரு மகாராஜன் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.