திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்!
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது
![]()
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தொடர் விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி நாராயணகிரி தோட்டம் , சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 20 மணி நேரமும், இலவச நேர ஒதுக்கீடு சர்வதரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு ஏழு மணி நேரமும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கட்டுகள் பெற்ற பக்தர்களுக்கு சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் , பால், காபி உள்ளிட்டவை பக்தர்களுக்கான வரிசையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கான தரிசனத்திற்கான நேரம் வரும்வரை வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து ஏழுமலையானின் அருள் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.


