பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்த தம்பதி

 
மோசடி

கடலூரில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். விவசாயியான இவர், அதே ஊரை சேர்ந்த ஐயம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்டம் ரோஸ்நகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (55) என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகமானார். அதே ஊரில் உள்ள பலருக்கும் அவர் நன்கு தெரிந்தவர் என்ற நிலையில் ரவிச்சந்திரன் அந்த கிராமத்தை சேந்தவர்களிடம் தான் பெரிய நிறுவனத்தில் உங்களை போன்ற பல பேரிடம் பணத்தை பெற்று பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்து வருவதாகவும் அந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கிறது. 

அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய மேலும் பணம் தேவைப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்தால், அந்த பணத்தை 6 மாதத்தில் இரட்டிப்பாக தருவேன் என்று கூறிஉள்ளார். அவ்வாறு இரட்டிப்பாக தரும் போது, அவருக்கு 10 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்றும் கூறிஉள்ளார். இதை நம்பி சுந்தர்ராஜன் 25.4.2020 அன்று ராமநத்தத்தில் வைத்து ரவிச்சந்திரன், அவரது மனைவி கற்பகம் (47) ஆகிய 2 பேரிடமும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் மொத்தம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். இதேபோல் ராமநத்தம் ஐயம்பெருமாளிடம் ரூ.10 லட்சம், தச்சூரை சேர்ந்த சீதாராமனிடம் ரூ.20 லட்சத்து 37 ஆயிரத்து 900, ராமநத்தம் ராஜூ கண்ணனிடம் ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சத்து 37 ஆயிரத்து 900 பெற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள், கூறியபடி பணத்தை தராமல் ஆறு மாதம் கடந்த பிறகும் இவர்களுக்கு பணம் கொடுக்காத நிலையில் இரட்டிப்பு கூட இல்லை கொடுத்த பணத்தையும் கொடுக்கவில்லை. 

arrest

நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி விட்டனர். இந்த தம்பதியினர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்ற ரவிச்சந்திரன், வீட்டில் இருந்த அவரது மனைவி கற்பகம் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் மோசடி செய்ததை ஏற்றுக்கொண்டனர். பணத்தை குடும்ப செலவுக்காகவும், ஆடம்பரமாக செலவு செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் திட்டக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.