விஜய்க்கு நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு வரவேற்ற தம்பதி
Apr 12, 2026, 14:18 IST1775983685716
கன்னியாகுமரி பிரச்சாரத்திற்காக வருகை தந்த விஜய்க்கு நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு வரவேற்ற தம்பதியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று 12:30 மணிக்கு தனி விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். விஜய்க்கு விமான நிலையம் உள்ளே வைத்து ஒரு தம்பதியினர் விஜய்யை நிறுத்தி அவரது நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர். பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், இதனை தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் ஏறிய விஜய் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்.



