காவலர் வீட்டில் திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டு

 
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவலர் குடியிருப்பில் இருந்த நாட்டு வெடி குண்டு திடிரென வெடித்தால் காவலரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அருகே காவலர் தங்குவதற்கு குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை காவலர் குடியிருப்பில் 15 வருடங்களாக  பூட்டி இருந்த ஒரு வீட்டை உடைத்து உள்ளே சென்ற  போக்குவரத்து காவலர் சரவணன் தங்கி இருந்துள்ளார். அப்பொழுது காவலர் வீட்டில் இருந்த லேப்டை சுத்தம் செய்யும் போது திடிரென அங்கு வைத்து இருந்த நான்கு நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்தது. இதில் கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது.


நாட்டு வெடி குண்டு வெடித்ததில்  போக்குவரத்து போலீஸ் சரவணன் காலில் பலத்த காயம் ஏற்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர்களை  கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் பிரபு என்பவர் வீடியோ எடுக்க விடாமல் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசி மிரட்டி உள்ளார். மேலும் தொடர்ந்து செய்தியாளர்களை காவல் நிலையத்திற்கு வரும்படி மிரட்டினார். இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r