பாஜக ஆலோசனை கூட்டம் தொடங்கியது!!

 
tn

 பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் தொடங்கியது.

tt

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள, முதல் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஆகும்.

tt
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.