மக்களவை தேர்தல் - அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிப்பு!!

 
ep

மக்களவை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

EPS

 இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

tn

1.திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., அவர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
2.திரு. C. பொன்னையன் அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்
3.முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A., அவர்கள்
கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்,
4.முன்னாள் அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் அவர்கள்
கழக அமைப்புச் செயலாளர்
வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
5. முன்னாள் அமைச்சர் திரு. C.Ve. சண்முகம், M.P., அவர்கள்
கழக அமைப்புச் செயலாளர்
விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர்,
முன்னாள் அமைச்சர் என்று குறிப்பிட்டள்ளார்.