இன்ஸ்டா, யூடியூப் பிரபலங்களுக்கு செக்!
கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக இன்ஸ்டா, ‘யூடியூப்' பிரபலங்களை அழைப்பதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களுக்கு சிறப்பு விருந்தி னர்களாக வாழ்க்கையில் சாதித்தவர்கள், படிப்பில் சிறந்து விளங்கியவர்கள், சாதனைக்கு சொந்தக்காரர்கள் என பட்டிய லிட்டு அதில் சிறந்த ஒருவரை தேர்வு செய்து அழைப்பதுதான் முந்தைய காலங்களில் நடைமுறையாக இருந்தது. ஆனால் இப்போது 'இன்ஸ்டா, யூடியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களை கல்லூரி விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கும் போக்கு சமீப காலங்களாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதனை பலரும் கண்டித்திருக்கின்றனர். சில பட்டமளிப்பு விழாக்களில் தகுதியில்லாதவர்களை கூட சிறப்பு விருந்தினராக அழைத்து பட்டங்களை வழங்குவதையும் உயர்கல்வித் துறை யில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் வேதனையோடு தெரிவித்தார். இந்தநிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட உயர்கல்வித்துறையினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

