திருவிழாவில் தேர் சரிந்ததால் பரபரப்பு!
பெரம்பலூர் அருகே கோயில் திருவிழாவின்போது தேர் அச்சு முறிந்து சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட கோவில் பாளையம் கிராமத்தில் இந்துசமய அறநிலைய திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோயிலின் உற்சவ மூர்த்தியான ஐயனார் ஒரு தேரிலும், காவல் தேவையான கருப்பு சாமி மற்றொரு தேரிலும் புறப்பட இருந்தன. குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான ச.சி.சிவ சங்கர் கலந்து கொண்டு விழா தொடங்கிய நிலையில் வடம்பிடித்து மக்கள் தேரை இழுத்தவுடன் அய்யனார் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து திடீரென தேரின் மேற்புறம் சாயத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிஷ்டவசமாக அருகிலிருந்த கருப்பசாமி தேரின் மேல் சாய்ந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனிடையே பாதுகாப்பு போலீஸார் பக்தர்களை அப்புறப்படுத்தி தேரை பாதுகாப்புடன் நிலைநிறுத்தினர். சம்பவத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழா வன்னம் அமைச்சர் சிவசங்கர் அந்த இடத்திலிருந்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உற்சர் ஐயனார் சிலையை மற்றொரு தேருக்கு இடம்மாற்றி தேரை இருக்க ஏற்பாடு செய்தார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோயில்பாளையம் தேர் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த பழைய தேர் என்பதால் மரத்தாலான அச்சு பாரம் தாங்காது முறிந்து விட்டதாக அறநிலை துரை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அமைச்சர் பங்கேற்ற கோயில் விழாவில் தேர் அச்சு முறிந்தது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


