நாயை கொன்றதாக பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு

 
dog

நாயை கொன்றதாக முகநூலில் புகைப்படத்துடன் பதிவிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 

dog

ஏகே. எம்எஸ்டி. தினேஷ் என்ற முகநூல் பக்கத்தில் வாலிபர் ஒருவர், நேற்று முன்தினம் இறந்த போன ஒரு நாயின் 2 புகைப்படங்களை தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். படத்திற்கு கீழே “தான் வாங்கி வச்ச புது செருப்புல அடிக்கடி அசிங்கம் செய்து வந்ததால் போட்டு தள்ளிட்டேன்” என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து ஈரோடு பழையபாளையம், சுத்தானந்தன் நகரை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

dog

விசாரணையில் அந்த இளைஞர் தேனி மாவட்டம், பெரியகுளம், மங்களம் பகுதியை சேர்ந்த தினேஷ்(25) என்பது தெரியவந்துள்ளது. இவர் சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூரில் தங்கி சென்டரிங் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 9ம் தேதி தினேஷ் தனது முகநூல் பக்கத்தில் “புதியதாக வாங்கிய செருப்பில் அடிக்கடி அசிங்கம் செய்தததால் நாயை கொன்று விட்டதாக” இறந்த நாயின் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார். தினேஷ் மீது தவறான முறையில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயமுறுத்தலை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவை தொடர்ந்து தலைமறைவான தினேஷை போலீசார் தேடி வருகின்றனர். அவரது முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.