பாரம் தாங்காமல் இரண்டாக உடைந்த சரக்கு லாரி! காஞ்சிபுரத்தில் பரபரப்பு

 
ச் ச்

காஞ்சிபுரம் வையாவூர் செல்லும் சாலையில் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அமைந்துள்ளது இந்த ரயில் நிலையம் சரக்குகளை கையாளும் முனையமாக செயல்பட்டு வருகிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள் மூலம் வரும் சரக்குகளை இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட இரும்பு ரோல் ஏற்றிச் செல்லப்பட்ட கனரக லாரி விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்பு ரோல் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. கனரக வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்ட இரும்பு ரோல் அதிகம் பாரம் காரணமாக லாரி இரண்டாக உடைந்து விபத்து ஏற்ப்பட்டது. விபத்தின் போது அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது விபத்துக்குள்ளான லாரியை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.