கார் டயர் வெடித்து அரசு பேருந்து மீது மோதியது- இருவர் பலி

 
கார் டயர் வெடித்து அரசு பேருந்து மீது மோதியது- இருவர் பலி

விழுப்புரம் மாவட்டம்  சித்தானங்கூர் கிராமத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்பியோ காரின் டயர் வெடித்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். 

accident

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் உள்ள சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடைக்கானலுக்கு சென்று விடுமுறையை கழித்து விட்டு வந்த ராணுவ வீரர் சகாயராஜ் மற்றும் அவரது மனைவி ப்ரிட்டோமேரி, அவரது தங்கை புனிதா மேரி மற்றும் குழந்தைகள் செரின் ரின்சி ஆகியோர் சொந்த ஊரான முகையூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது அவர்கள் வந்த ஸ்கார்பியோ காரின் முன்பக்க வலது டயர் ஆனது சித்தானங்கூர் கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்கார்பியோ கார் சென்டர் மீடியினில் மோதி,எதிர் திசையில் சென்ற  மதுரை அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்கார்பியோ காரில் முன் இருக்கையில் பயணம் செய்த ப்ரிட்டோமேரி, மற்றும் காரை ஓடிய ராணுவ வீரர் சகாயராஜ், ஆகியோர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த புனித மேரி மற்றும் குழந்தைகள் ஆகியோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.