சாவு இப்படியா வரணும்! பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது பேருந்து ஏறி

 
death

சென்னை அடுத்த திருவேற்காடு பேருந்து நிலையத்தில் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது பேருந்து ஏறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

accident

சென்னை அடுத்த திருவேற்காட்டை சேர்ந்தவர் ஏழுமலை (48). இவர், பிளாஸ்டிக் மோல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியை பிரிந்து திருவேற்காடு பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தார். நேற்று இரவு, வழக்கம் போல், பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில், மது போதையில் உறங்கிக் கொண்டிருந்தார். அவர், புரண்டு படுத்தபோது, பேருந்து செல்லும் வழியில் தவறி விழுந்துள்ளார். அப்போது, பெரம்பூரில் இருந்து திருவேற்காடு பேருந்து நிலையத்தில் நுழைந்த தடம் எண் : 29 இ அரசு பேருந்து, ஏழுமலை தலைமீது ஏறி இறங்கியதில் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மீதம் இருந்த மது பானத்தை தனது இடுப்பில் வைத்திருந்த நிலையில் எழுமலையின் உடலுடன் சேர்ந்து மது பாட்டிலும் நசுங்கியது.

திருவேற்காடு போலீசார், அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக சென்னை, அண்ணா நகர், பெரிவரி சாலையைச் சேர்ந்த ஓட்டுனர் ஜம்புலிங்கம், (50) மற்றும் திருவள்ளூர், ஆர். கே. பேட்டை, தாமரை குளத்தைச் சேர்ந்த நடத்துனர் சாமிநாதன், (39) ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.