5 மாத குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தந்தை!

 
T

நீலகிரியில் 5 மாத குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால் ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற தந்தை  கைது செய்யப்பட்டுள்ளார்.
 

murder
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஓல்ட் ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம். அவரது மனைவி ரம்யா.  இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு கேதரின் ஏஞ்சல் என்று ஐந்து மாத பெண் குழந்தை இருந்துள்ளது. 

பிரேம் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.  தினமும் காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் அவர் இரவு 9 மணிக்கு வீடு திரும்பும் போது வழக்கம். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பிரேம் வேலைக்கு சென்றுள்ளார்.  அவர் சென்ற சிறிது நேரத்தில் குழந்தையின் கண்ணம் சிவந்து இருந்துள்ளது. அதேசமயம் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை.  இதனால் பயந்து போன ரம்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

arrest

 குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறிய ரம்யா இது தொடர்பாக ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.  சில தினங்களாக குழந்தையின் அழுகை சத்தத்தை தாங்க முடியாததால் பிரேம் அவ்வப்போது குழந்தையை அடித்து வந்துள்ளார் .  இதனால் கணவருக்கும்  மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் ரம்யா துணி துவைத்துக் கொண்டிருந்தபோது குழந்தை அழுது கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்து உதைத்துள்ளார்.  இதில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடிபட்டு  குழந்தை இறந்துள்ளது.  இது தொடர்பாக போலீசார் பிரேம் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  பிரேமுக்கு மனநல பாதிப்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.