காதலியான தங்கை! உறவுமுறையை மீறி காதலித்த இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் தங்கை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விபரீத காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் காதலியின் தந்தையால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
குன்னுவரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (24). இவர் சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகளை கபிலன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கபிலன் காதலித்து வந்த பெண் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் இதனை மணிகண்டன் கண்டித்துள்ளார். இருப்பினும் கபிலன் தன் காதலை கைவிட மறுத்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று தன் காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்ற கபிலனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே பயங்கர வாய்தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து கபிலனை சரி மாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த கபிலன் விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கபிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை (46)கைது செய்தனர் மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.