கீரிப்பிள்ளை கடித்து கீரிப்பிள்ளை போலவே மாறி உயிரிழந்த சிறுவன்!
திருவாரூரில் கீரிப்பிள்ளை போல செய்கை செய்தபடி, சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவன் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

திருவாரூரில் கீரிப்பிள்ளை போல செய்கை செய்தபடி, சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவன் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அம்மையப்பன் பகுதியை சேர்ந்த நவீன் என்ற சிறுவன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது, கீரிப்பிள்ளை கடித்துள்ளது. 3 மாதங்களுக்கு முன் கீரிப்பிள்ளை கடித்து கீரிப்பிள்ளை போல செய்கை செய்தபடி சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். சிறுவனுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கீரிப்பிள்ளை கடித்த காயத்திற்கு முறையாக மருத்துவமனைக்கு செல்லாமல் அருகில் உள்ள மெடிக்கல் ஒன்றில் மாத்திரை வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில், அரசு மருத்துவமனையில்தான் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல் சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.


