வாடிக்கையாளர் போல் வந்து முகமூடிப் பெண் செய்த துணிச்சலான கைவரிசை! ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கக் கம்மல்கள் அபேஸ்..!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா நகரின் ஆவாஸ் விகாஸ் காலனியில் உள்ள அட்ராசி சாலையில் அமைந்துள்ள 'ஆர்யா ஜுவல்லர்ஸ்' நகைக் கடையில், வாடிக்கையாளர் போல் நடித்து வந்த முகமூடி அணிந்த பெண் ஒருவர், தனது ஆண் கூட்டாளியுடன் சேர்ந்து 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைக் கடையின் உரிமையாளர் ஷிவி குப்தா அளித்துள்ள தகவலின்படி, திங்கட்கிழமையன்று ஹில்டன் கான்வென்ட் பள்ளி அருகே உள்ள தனது கடையில் அவர் இல்லாத நேரத்தில், முகமூடி அணிந்த பெண் ஒருவர் ஆண் நபர் ஒருவருடன் கடைக்கு வந்துள்ளார். கடையில் இருந்த உரிமையாளரின் மகனிடம் வாடிக்கையாளர் போல் நகைகளைக் காட்டுமாறு அந்தப் பெண் கேட்டுள்ளார்.
நகைகளைப் பார்வையிடுவது போல் நடித்த அந்தப் பெண், சுமார் 25 கிராம் எடையுள்ள இரண்டு ஜோடி தங்கக் கம்மல்களைக் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது கைக்குள் மறைத்து எடுத்துக் கொண்டு, பின்னர் எதுவும் தெரியாதது போல் தன் கூட்டாளியுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு கம்மல்கள் மாயமானதைக் கண்ட உரிமையாளரின் மகன் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவசர உதவி எண்ணான 112-க்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அந்தப் பெண் நகைகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்துப் பேசிய நகரக் காவல் கண்காணிப்பாளர் (CO City) டாக்டர் பிரதீப் குமார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், தப்பியோடிய இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
अमरोहा के अतरासी रोड स्थित आर्या ज्वैलर्स में नकाबपोश महिला ने अपने पुरुष साथी के साथ ग्राहक बनकर लाखों की चोरी को अंजाम दिया। जेवर देखने के बहाने महिला करीब 25 ग्राम सोने के दो जोड़ी कुंडल, जिनकी कीमत 3 लाख रुपये से अधिक बताई जा रही है, चोरी कर फरार हो गई। पूरी वारदात CCTV में कैद हो गई है। पुलिस फुटेज के आधार पर आरोपियों की तलाश में जुटी है। #AmrohaNews #JewelleryTheft #CCTVFootage #UPPolice #BreakingNews #News1india @News1IndiaTweet @amrohapolice
— News1India (@News1IndiaTweet) November 17, 2026

