புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 24 காளைகளை தழுவிய வீரருக்கு பைக் பரிசு

 
jallikka

புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டில் 24 காளைகளை தழுவி முதலிடம் பிடித்த கவாஸ்கர் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

Image

புதுக்கோட்டை அருகே உள்ள முக்காணிப்பட்டியில்  புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காலை 8-15 மணி முதல் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு 4.50 மணியுடன் நிறைவு பெற்றது. இதில் 611 காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட நிலையில், 174 வீரர்கள் களம் கண்டனர். மேலும் இதில் 15 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் 250 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதார துறையினர் வருவாய் துறையினர், கால்நடைபராமரிப்புத் துறையினர்‌, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Image

இந்த ஜல்லிக்கட்டில் 24 காளைகளை தழுவிய புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கவாஸ்கருக்கு முதல் பரிசாக ஹோண்டா சைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.  இவர் கடந்த ஆண்டும் இதே ஜல்லிக்கட்டில் 20 காளைகளை தழுவி பைக்கை வென்றார். மேலும் இதில் சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரது ராட்சசன் காளை தேர்வு செய்யப்பட்டு எக்ஸெல் ஹெவி டூட்டி இருசக்கர வாகனத்தை பரிசாக பெற்று சென்றது.