42 வயசுல இதெல்லாம் தேவையா? Heartbreaking விபத்து

 
ச்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஓட்டுநர் பயிற்சிக்காக காரை எடுத்துச் சென்ற 42 வயது பெண், எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

42-year-old woman dead while test driving


கேஸ்டோபூர் பகுதியில் உள்ள பிரஃபுல்லா கானன் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் சுமித்ரா தாஸ், ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வை எதிர்நோக்கியிருந்தார். இதற்காக காரில் பயிற்சி மேற்கொண்டபோது, கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் மூழ்கியது. இதில் நீரில் மூழ்கிய சுமித்ரா தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தன்று தனது மகளை பள்ளியில் இறக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிய அவர், பின்னர் அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்த Hyundai Eon காரை எடுத்து வந்து ஓட்டி பழகியுள்ளார். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறவிருந்ததாக கூறப்படுகிறது. சுமித்ரா பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கார் வேகமெடுத்து, கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்கு பாய்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

சம்பவத்தை அறிந்ததும் தீயணைப்புப் படையினரும் போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கியிருந்த காரை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி வெளியே கொண்டுவந்தனர்.