வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி டிப்பர் லாரி மோதி பலி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி மீது டிப்பர் லாரி மோதி விபத்து, சிறுமி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் டிப்பர் லாரி உரிமையாளரும் ஓட்டுனருமான கவி நாவரசனை ஆலங்குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு ஹரிணி ஸ்ரீ, சஞ்சனா ஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஹரிணி ஸ்ரீ மூன்றாம் வகுப்பு படித்து வரக்கூடிய நிலையில் சஞ்சனா ஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமராஜன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் இரண்டு குழந்தைகளும், தாய் தமிழ்ச்செல்வியோடு உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நான்கு வயதுடைய சிறுமி சஞ்சனா ஸ்ரீ அவர்களது வீட்டு வாசலில் உள்ள சாலையில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அறந்தாங்கியிலிருந்து கிரஷர்மண் ஏற்றிக்கொண்டு வெள்ளக்கொல்லை கிராமம் வழியாக ஆலங்குடி சென்ற டிப்பர் வாகனம் சிறுமி சஞ்சனா ஸ்ரீ மீது மோதிய நிலையில் சஞ்சனா ஸ்ரீ தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனை அடுத்து சஞ்சனா ஸ்ரீயை அவரது தாயார் மற்றும் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது வழியிலேயே சஞ்சனா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அவரது தாயார் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த குழந்தையை பார்த்து அவரது தாய் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து டிப்பர் லாரியை ஓட்டிவந்த ஓட்டுனரும் உரிமையாளருமான கவிநாவரசனை கைது செய்த ஆலங்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த சிறுமி சஞ்சனா ஸ்ரீயின் உடல் உடற்குறு ஆய்வுக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

