பட்டாசு வெடித்து 4 வயது குழந்தை உயிரிழப்பு! ராணிப்பேட்டையில் சோகம்

 
death

ராணிப்பேட்டை அருகே 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தீபாவளியான இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு வெடி சத்தம் குறைந்தது எப்படி? | Dinamalar

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகளை உடுத்தி தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஒருவருக்கொருவர தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தீபாவளி நாளின் போது காலை 6மணி முதல் 7மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்து 4 வயது குழந்தை உயிரிழந்தார். ரமேஷ் என்பவரின் 4 வயது மகள் நவிஷ்கா பட்டாசு வெடித்தபோது படுகாயமடைந்து உயிரிழந்தார். முன்னதாக படுகாயமடைந்த நவிஷ்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.