தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

 
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய சென்ற 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி..

வாணியம்பாடி  நேதாஜி நகர் பகுதியில் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Baby dies after falling into hot water | வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை  உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன். இவரது மனைவி தமிழரசி. இவர்களின் வீடு கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை சிறுவனின் தாயார் கழிவறைக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது அவருடைய மூன்று வயது குழந்தை சர்வேஷ்  காணவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெற்றோர்கள் அக்கம் பக்கம் தேடிப்பார்த்து வந்த நிலையில் வீட்டினுள் தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்து கிடந்த இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சிறுவனை சடலமாக மீட்டனர்.

சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் வாணியம்பாடி நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்திருந்ததின் பேரில் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடியில் வீட்டினுள் மேல் மூடியை மூடாமல் வைக்கப்பட்டிருந்த 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் மூன்று வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.