போதை ஊசியை உடலில் செலுத்திய 20 வயது இளைஞர் உயிரிழப்பு! கதறும் காதல் மனைவி

 
இந்தியாவின் வட மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. நடிகைகள், நடிகர்கள் பலர் போதைப்பொருள் வழக்குகளில் சிக்குகின்றனர். அண்மையில் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பார்ட்டியில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். 28நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு ஆர்யன் கானுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  இச்சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் கோடிக்கணக்கில் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையின் விலி பார்லி பகுதியில் போதைப் பொருள் பழக்கம் இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  உடனடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்து போதைப்பொருள் கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளது. போதைப்பொருள் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு எத்தனை கோடி என்பது தெரியவரவில்லை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போதை ஊசி உடலில் செலுத்திய இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னையில் பரவும் போதை ஊசி கலாசாரம்... கடந்த ஆறு மாதத்தில் 6 பேர் பலி |  Drug injection culture spreading in North Chennai 6 people died in last six  months

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தான் காதலித்து அனுசியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். சிறு வயது முதலே கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையானது அனுசியாவிற்கு திருமணம் ஆனதும் தெரிய வந்து உள்ளது. இதனால் அனுசியா தனது கணவர் கௌதமிடம் போதைப் பழக்கத்தை கைவிடுமாறு எச்சரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதிக அளவிலான போதைக்கு அடிமையான கௌதம் தனது உடலில் போதை ஊசி செலுத்திக் கொள்ளும் அளவிற்கு அடிமையாகி விட்டார். நேற்று மாலை கௌதம் வீட்டில் இருந்த பொழுது அவரது நண்பர்கள் சரவணன், ஸ்ரீதர் ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களுடன் மொட்டை மாடிக்கு சென்ற கௌதம் தனது உடலில் வலது கையில் சிரஞ்ச் மூலம் போதை ஊசி செலுத்தி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக திடீரென கௌதம் மயக்கம் அடைந்துள்ளார்.

Death

இதனைக் கண்ட அவரது நண்பர்கள் உடனடியாக கீழே வந்து உறவினர்களுடன் கூறிவிட்டு கௌதமை தங்களது இருசக்கர வாகனத்தில் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் கௌதம் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் உடனடியாக விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து இளைஞர் கௌதம் உடலில் செலுத்திய போதை மருந்து, சிரஞ்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 20 வயதில் போதை ஊசிக்கு அடிமையான கௌதம் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது