உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சி அளித்த 15 வயது இந்திய சிறுவன்..!

 
11

பிரபல ஆன்லைன் செஸ் விளையாட்டு தளமான Chess.comவாரந்தோறும் வியாழக்கிழமை நடக்கும் போட்டியில் வந்தன், உலக தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த, மாக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார்.

இதில் வந்தன் வெள்ளை நிறக் காய்களுடனும், கார்ல்சன் கறுப்பு நிற காய்களுடனும் விளையாடினர். 31வது நகர்த்தலில் இருவரும் ராணியை இழந்தனர். பிறகு 50வது நகர்த்தலின் போது, கார்ல்சன் விலகினார். இதனையடுத்து வந்தன் வெற்றி பெற்றார்.

இது தொடர்பாக வந்தன் கூறுகையில், விளையாடும் போது நான் இழப்பதற்கு ஏதும் இல்லை. லாபம் அடைவதற்கு ஏதும் இல்லை. திறமையை வெளிப்படுத்தி விளையாட வேண்டும் என எண்ணினேன் என்றார். அவரது பெற்றோர் கூறுகையில்,'' இந்த போட்டியில் விளையாட அவர் முதலில் தயக்கம் காட்டினார். நாங்கள் தான் ஊக்கப்படுத்தினோம். போட்டி முடிந்ததும் தந்தையிடம் சென்று கார்ல்சனுடன் விளையாடி வெற்றி பெற்றதாக கூறினார்,'' எனத் தெரிவித்தனர்.