10 மாத குழந்தை உயிரிழப்பு - தடுப்பூசியே காரணம் என பெற்றோர் புகார்
கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.
கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் மருத்துவமனை தரப்பில் டீன் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகையில், குழந்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் தடுப்பூசிக்குப் பிறகு காய்ச்சல், சோர்வு, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், பின் அங்கு நான்கு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் குழந்தை உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாகவும், சிகிச்சை விவரங்களை உரியவாறு தெரிவிக்காததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

