திருச்செந்தூர் முருகனுக்கு 10 கிலோ எடையில் வெள்ளி வேல்... உண்டியலுக்குள் நுழையாது என்பதால் பக்தர் செய்த செயல்
![வேல்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/20590bfa18c784bcf2f42a40df717c66.jpg)
திருச்செந்தூர் இன்று கோவில் உண்டியல் என்னும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று உண்டியல் என்னும் இடத்திற்கு வந்தது வெள்ளி வேல் உண்டியல் எண்ணும் பணியில் இருந்தவர்களுக்கு ஒரு முருக பக்தர் இன்ப அதிர்ச்சி அளித்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவார்கள். இந்த உண்டியல் காணிக்கைகள் மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் காலையில் தொடங்கியது. இதற்காக கோவில் உண்டியலில் இருந்த காணிக்கைகள் அனைத்தும் கோவில் பணியாளர்கள் மொத்தமாக வசந்த மண்டபத்திற்கு கொண்டு வந்து அங்கு பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. அப்போது தான் அந்த இடத்தில் அதிசயம் நடந்தது. கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணிக் கொண்டிருந்த போது உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்படுகிறது என்று அறிந்து வந்த கடலூரைச் சேர்ந்த முருக பக்தர் ஒருவர் மூன்றரை அடி உயரம் கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட 10 கிலோ எடை கொண்ட வேலை முருகனுக்கு உண்டியலில் செலுத்துவதற்காக கொண்டு வந்தார்.
பெரிய அளவில் வேல் இருந்ததால் அதை உண்டியலில் போடமுடியாது என்பதை அறிந்து இன்று உண்டியல் எண்ணும் இடத்திற்கே தனது குடும்பத்துடன் வந்து முருகனுக்கு சமர்ப்பிப்பதற்காக கூறினார். அந்த வேல் தாமரை மேல் முருகனின் வேல் இருப்பது போல் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை கோவில் அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து கோவில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முருக பக்தர் ஒருவர் மூன்றரை அடி உயரத்தில் 10 கிலோ கொண்ட வெள்ளி வேலை முருகனுக்கு வழங்கிய சம்பவம் திருச்செந்தூர் மட்டுமல்லாமல் முருக பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.